2.0 திரை விமர்சனம் | 2.0 Movie Review

ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 2.0. ரஜினிகாந்த்,அக்ஷய் குமார் நடித்துள்ள இப்படம் இந்தியாவில் முதல் 3D படமாக உருவாகியுள்ளது.

அதிகமான VFX காட்சிகளுடன் சுமார் 450 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட  இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தற்போது இப்படத்தின் விமர்சனத்தை பாப்போம்.

கதை

ஆரம்ப காட்சியிலே அக்‌ஷய் குமார் செல்போன் டவரில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்கிறார். அதை தொடர்ந்து அடுத்த நாளில் இருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து செல்போன்களும் தொலைந்து போகிறது.

அதே சமயம் சிட்டியில் இருக்கும் அணைத்து செல்போன் டவரையும் ஒரு ராட்சச பறவையாக வரும் அக்ஷய் குமார் அழித்து வருகிறார்.மேலும் செல்போன் உரிமையாளர்களும், டெலிகாம் மினிஷ்டரும் இறந்து போகின்றனர்.

அதை தொடர்ந்து இந்திய அரசி விசிகரனிடம் (ரஜினி) உதவியை நாட அவர் மீதும் சிட்டியை வரவழைக்கிறார். அக்ஷய் குமார் இப்படம் செய்வதற்கு காரணம் என்ன? அவரை சிட்டி அழித்தாரா என்பது தான் மமீதி கதை.

விமர்சனம்:

தொழில்நுட்ப ரீதியாயக ஷங்கரின் யோசனைகள் பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டம் என்று கூறலாம். இந்திய சினிமாவை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்லும் படமாக இந்த 2.0 அமைத்திருப்பது மறுக்க முடியாத உண்மை.

முதல் பாதியிலே மெய்சிலிர்க்க வைத்துவிட்டார் ஷங்கர். ஊரில் உள்ள அணைத்து செல்போன்களையும் ஈர்த்துக்கொண்டு அக்ஷய் குமார் ஒரு ராட்சச பறவையாக மாறுகிறார்.

3Dயின் அந்த காட்சிகள் மிகவும் கண்களுக்கு விருந்தாக அமைத்துள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு நிகராக CG காட்சிகளை தனது ரசனையுடன் சேர்த்து கொடுத்துள்ளார் ஷங்கர்.

செல்போன் டவர்களை அழிக்கும் அக்ஷய் குமார் ஏன் இப்படி செய்கிறார் என்பது கண்டுபித்து அவரையும் அழிக்க ரஜினியின் உதவி தேவைப்படுகிறது. அவருக்கு உதவும் ரோபோவாக வரும் எமி ஜாக்சன் பல இடங்களில் ஸ்கோர் செய்துள்ளார்.வாசிகரனாக வரும் ரஜினியின் சிம்பிளாக இருந்தாலும் சிட்டி வந்தவுடன் தியேட்டர் குதூகலமாகிவிடுகிறது.

அக்ஷய் குமார் எப்படி அசாத்திய சக்தியக உருவாகியுள்ளார் என்பதை ஆரோ, பாசிட்டிவ் எனர்ஜி, நெகட்டிவ் எனர்ஜி என்று கூறி எளிதில் மக்களுக்கு புரியும் படி திரைக்கதையை அமைத்துள்ளார்கள்.

முதல் பாகத்தில் வில்லனாக வந்த சிட்டி 2.0 இதில் ரஜினிக்கு உதவியாக வருகிறார்.இறுதி காட்சியில் சிட்டியும் அக்ஷய் குமாரும் சண்டை போடும் காட்சி பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டம். ஹாலிவுட் படமான transformers படத்திற்கு நிகராக அமைத்துள்ளது.

அக்ஷய் குமார் கூறும் பிளாஷ் பேக் காட்சி அனைவரது மனதையும் உருக்கிவிடும். மிரட்டலான வில்லங்க வரும் இவர் காட்சிகளில் CG அசத்தலாக அமைத்துள்ளது.

இப்படத்தில் 3D பற்றி நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.படம் ஆரம்பம் முதல் இறுதிவரைக்கும் அதிக இடங்களில் கண்களுக்கு விருந்தாக அமைந்துளளது.ஷங்கரின் 3D முயற்சி நிச்சியம் வெற்றி பெற்றது என்றே சொல்லவேண்டும்.

படத்தில் இது மட்டும் இல்லாமல் செல்போன் டவர்களால் பறவைகளுக்கும், மனிதர்களுக்கு எப்படிப்பட்ட பாதிப்புகள் வருகிறது என்று அழுத்தமாக கூறியுள்ளார்.

ப்ளஸ்:

படத்தில் கதை மிகவும் அழுத்தமான இருந்தது. சிட்டி 2.0 வரும் காட்சிகள் தியேட்டரில் விசில் பறக்கிறது. பிளாஷ் பேக் காட்சியில் அக்ஷய் குமாரின் நடிப்பு பாராட்டக்கூடியதாக இருக்கும்.

VFX காட்சிகள் அனைத்தும் சிறந்த தரத்தில் இருந்தது படத்தை ரசிக்கும் படி அமைத்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் பின்னிசை நிறைய காட்சிகளில் சிலிர்க்க வைத்துவிடும்.

முத்துராஜின் கலை, ரசூல் பூக்குட்டியின் சவுண்ட் இன்ஜினியரிங், நீரவ்ஷோவாவின் ஒளிப்பதிவு, ஆண்டனியின் எடிட்டிங் அனைவரும் தங்களது பெஸ்டை கொடுத்துள்ளார்கள். 3D காட்சிகள் ரசிக்கும் படியாக இருக்கும்.

மைனஸ்:

இரண்டாம் பாதியில் திரைக்கதை மெதுவாக அமைத்திருப்பது. யூகிக்க கூடிய திரைக்கதை என்பதால் விறுவிறுப்பு குறைந்து விடுகிறது.

மொத்தத்தில் படம் கண்களுக்கு விருந்தாக அமையும் எனபதால் சந்தேகம் இல்லை.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.மேலும் செல்போன் டவர் மூலம் வரும் பறவைகள்,மனிதர்களுக்கு வரும் ஆபத்துகள். அதனால் ஏற்படும் அழிவு என்னவென்று அழுத்தமாக கூறியுள்ளார்.

RATING: 4.0/5 

 

Loading...