அனைவரும் எதிர்பார்த்த தமிழகத்தில் 2.0 உண்மையாக வசூல் இதோ – இன்றைய நிலவரம் இதுதான்!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடிப்பில் பிரம்மாண்ட VFX காட்சிகளுடன் 3Dயின் உருவான 2.0 படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

முதல் வாரம் முடிவில் இப்படம் உலகம் முழுவதும் 500 கோடி ருபாய் வசூல் ஈட்டிய பிரம்மாண்ட சாதனையை படைத்துள்ளது.500 கோடியை கடந்த முதல் தமிழ் படம் என்கிற பெருமையை பெற்றுள்ள நிலையில், இந்த படத்தில் வசூல் வேட்டை பல இடங்களிலும் தொடர்ந்து வருகிறது

இதில் தமிழகத்தில் மட்டும் உண்மையான வசூல் விவரத்தை வெளியிடாமலே வைத்திருந்தார்கள். 3டி பொறுத்தவரை 2.0 மெகா வசூல் தான், திரையிட்ட அனைத்து இடங்களிலும் கூட்டம் அலை மோதுகின்றது, ஆனால், 2டி-க்கு கூட்டமே இல்லை.

இப்படி இருக்க தங்களுக்கு கிடைத்த தகவப்படி தற்போது வரை தமிழகம் முழுவதும் 2.0 ரூ 85 கோடி வரை வசூல் செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

எப்படியும் இப்படம் தமிழகத்தில் மட்டும் 120 கோடி வசூலை எட்டும் என கணிக்கப்படுகிறது. வார நாட்களில் கூட கூட்டம் வருகிறது என்று தியேட்டர் உரிமையாளர்கள் கூறிவருகிறார்கள்.

Loading...