96 படத்தின் முதல் நாள் வசூல் என்ன தெரியுமா? – செம வரவேற்பு!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள “96” படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி மிகவும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

முழுக்க முழுக்க காதல் காவியமாக உருவாகியுள்ள 96 படத்தை ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள். இப்படத்தின் இயக்குனர் பிரேம் குமார், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இருவருக்கும் அதிக பாராட்டுகள் வருகிறது.

ரசிகர்கள் அனைவருமே இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து வருகின்றனர், இந்நிலையில் 96 முதல் நாள் சென்னையில் மட்டுமே ரூ 47 லட்சம் வரை வசூல் செய்துள்ளது. (முதல் ஷோ ரத்து செய்யபட்டது)

தமிழகம் முழுவதும் எப்படியும் ரூ 3 கோடிகளுக்கு மேல் இப்படம் வசூல் செய்திருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதன் மூலம் இந்த வார இறுதிக்குள் ரூ 10 கோடி வசூலை 96 தாண்டும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Loading...