குட்டி கதை அரசியல்வாதிகளுக்கு மட்டும் தானா -இதனால் தான் விஜய்யை வெறுக்கிறான் – கருணாகரன் பாய்ச்சல்!

சமூக தளங்களில் அரசியல்வாதிகள் சண்டை, சினிமா நடிகர்களின் ரசிகர்கள் சண்டை என நாறிப்போய் கிடக்கிறது. குறிப்பாக ட்விட்டர் பக்கம் சென்றுவிட்டார் ஒரு நிமிஷம் தலை சுற்றிவிடும்.

இன்று ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது, அதாவது கடந்த ஏப்ரல் மாதம் தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்த போது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் படக்குழுவினர் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தினார்கள்.

இதை நடிகர் கருணாகரன் டிவிட்டரில் விமர்சனம் செய்தார். சும்மா இருப்பார்களா விஜய் ரசிகர்கள் அப்போதே அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்துவிட்டனர்.

இந்நிலையில் அண்மையில் நடந்த சர்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், கடுப்பேற்றுபவர்களிடம் கம்முன்னு இருக்க வேண்டும் என தன் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் சில குட்டி கதைகள் கூறியும் அரசியல் தலைவர்களை அவர் விமர்சித்திருந்தார்.

இது குறித்து விமர்சித்துள்ள கருணாகரன், ‘குட்டி கதைகள் வெறும் அரசியல் தலைவர்களுக்கு மட்டும்தானா? ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் நடிகர்கள் தன் நண்பன், நண்பிகள் அதைப் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும்’ என விஜய்யை மறைமுகமாக சாடினார்.

இதற்கும் விஜய்யின் ரசிகர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.இதற்குப் பதிலளித்துள்ள கருணாகரன், ‘தம்பி எங்க அப்பா இந்த நாட்டுக்காக ’ரா’(RAW) அதிகாரியாக என்ன எல்லாம் செய்தார் என்று உனக்குத் தகவலுக்காக சொல்கிறேன். உன்னைப் போன்ற ஃபேக் ஐடியில் வந்து தகாத வார்த்தைகளால் பேசுவதால் தான் விஜய் சாரை வெறுக்கிறேன்’ என்று கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.