“பேட்ட” படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபல ஹீரோ – ரசிகர்கள் ரியாக்‌ஷன்

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது “பேட்ட” படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவர் ஹாஸ்டல் வார்டன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா,பாலிவுட் நடிகர் நவாஸுதீன், திரிஷா, சிம்ரன், ஜோக்கர் சோம சுந்தரம், மெகா ஆகாஷ் என முக்கிய பிரபலங்கள் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.

தற்போது என்னவென்றால் இவர்களுடன் நடிகர் சசிகுமாரும் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. படத்தில் சசிகுமார், ரஜினியின் பிளாஸ்பேக் நண்பராக நடிக்கிறாராம். தற்போது இந்த காட்சியின் படப்பிடிப்பிற்காக இவரும் ரஜினியுடன் வாரணாசியில் தான் உள்ளாராம்.

இவ்வளவு நடிகர்கள் பட்டாளத்தை வைத்து இயக்கும் கார்த்திக் சுப்பாராஜ் அனைவருக்கும் சரியான கதாபாத்திரங்களை கொடுப்பாரா இல்லை சொதப்பிவிடுவாரோ என்று ரசிகர்கள் பயந்து வருகிறார்கள்.