விஜய் ரசிகர்களே ஜாக்கிரதை – கைது செய்ய தேடும் அதிமுக !

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “சர்கார்” படத்திற்கு தொடர்ந்து பிரச்சனைகள் எழுந்து வருகிறது.இப்படத்தின் அதிமுகவினரை மறைமுகமாக சாடும் காட்சிகள் நிறைய இருப்பதாக கூறி அக்கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.

மறைந்த அதிமுக தலைவர் ஜெயலலிதாவின் இயற்பெயரை சர்கார் படத்தின் வில்லிக்கு வைத்தது, இலவச பொருட்கள் கொடுப்பதை எதிர்ப்பது போன்ற காட்சிகளை வைத்து அதிமுகவிற்கு எதிராக விஜய் செயல்படுவதாக கூறி தொண்டர்கள் கொந்தளித்துளளர்கள்.

கலவரம்:

சர்கார் திரையிடும் தியேட்டர் முன்பு போராட்டம் நடத்தி சில காட்சிகளை ரத்து செய்யும் அளவிற்கு கலவரத்தில் ஈடுபட்டனர். மேலும் முருகதாஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அதிமுகவினர் தீவிரம் காட்டி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

கைது:

இதற்கிடையே ஆதரவாக இருக்கும் அவரது ரசிகர்களை தமிழக அரசு தொடர்ந்து கைது செய்து வருகின்றது. ஆம், அனுமதியின்றி விஜய் ரசிகர்கள் பேனர் வைத்ததாக போலிஸார் கைது நடவடிக்கையில் இருக்க, ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

அதிமுகவினர் கோபம் ரசிகர்கள் மீது திரும்பியதால் விஜய் கண்டிப்பாக பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளார், அவர் அறிக்கைக்கு தான் விஜய் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Loading...

Related posts