ரஜினி-அஜித் மோதல் நடந்தால் என்ன நடக்கும்?

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர் ரஜினிகாந்த், அஜித். இவர்கள் படங்கள் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபவாளி போல இருக்கும்.

கார்த்தி சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “பேட்ட” படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. வழக்கம் போல ரஜினி படத்திற்கு இருக்கும் எதிர்ப்பார்ப்பு இந்த படத்திற்கும் இருக்கிறது.

சொல்லப்போனால் இந்த படத்திற்கு இரண்டு மடங்கு அதிகமாகித்தான் உள்ளது.ஏனென்றால் பேட்ட படத்தில் ரஜினியுடன் நிறைய முன்னணி நடிகர்கள் பட்டாளமே நடிக்கிறது.

இதே சமயத்தில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் விஸ்வாசம் படம் பொங்கல் ரிலிஸ் என்று அறிவித்துவிட்டனர், ஆனால், திடீரென்று தற்போது அனைத்து திரையரங்க உரிமையாளர்கள் தலையிலும் இடி விழுந்துள்ளது.

ஆம், விஸ்வாசம் படத்துடன் ரஜினி நடித்த பேட்ட படமும் வரவுள்ளதாம், இதனால், பல திரையரங்கங்கள் வசூல் பாதிப்பு அடையும் என அச்சத்தில் உள்ளனர்.

அதே நேரத்தில் ஏதாவது ஒரு படத்தை தள்ளிப்போட சொல்லி கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.