மூன்றாவது போஸ்ட்டரை ஒரு கண்டிஷனோடு ரிலீஸ் செய்ய சொன்ன தல அஜித் – ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் !

அஜீத்தை வைத்து வீரம்,வேதாளம், விவேகம் போன்ற படங்களை இயக்கிய சிவா தற்போது நான்காவது முறையாக அஜித்தை வைத்து விஸ்வாசம் படத்தை இயக்கி வருகிறார்.

சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்துவரும் நிலையில் வரும் பொங்கலுக்கு இப்படம் ரிலீஸ் ஆகவுளள்து.

இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு விஸ்வாசம் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை பெரிய அளவில் திருப்திப்படுத்தவில்லை.

மேலும் போஸ்டரில் நிறைய தவறுகள் இருந்ததால் விஜய் ரசிகர்கள் கடுமையாக நக்கலடித்து பதிவிட்டு வருகின்றனர்.அஜித்-விஜய் ரசிகர்களுக்குள் சமூகத்தளத்தில் போரே நடந்து வருகிறது.

இது அஜித் காதிற்கு போக இதை அடுத்து விரைவில் விஸ்வாசம் படத்தின் புதிய போஸ்டரை வெளியிடும்படி படநிறுவனத்திடம் அஜித் தெரிவித்ததாக ஒரு தகவல் வந்துள்ளது. அதுமட்டுமல்ல அந்த போஸ்டரை டிசைன் செய்து தன்னிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பிறகே வெளியிட வேண்டும் என்றும் சொன்னாராம்.