சுசியை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளிய அமலா பால் – வீடியோ ஆதாரத்தில் மாட்டிகிட்டாரே!

இந்திய சினிமா திரை முழுக்க தற்போது மீ டூ தான் வைரலாக பேசப்படுகிறது. திருட்டுப்பயலே 2 படத்தில் நடித்திருந்த நடிகை அமலா பால், அந்த படத்தின் இயக்குனர் சுசிகணேசன் மீது மீடூ புகார் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே லீனா மணிமேகலை என்ற குறும்பட இயக்குனர் சுசி கணேசன் மீது கூறிய புகாருக்கு ஆதரவாக அமலா பால் இவ்வாறு கூறியிருந்தார்.

இரட்டை அர்த்தத்தில் பேசுவது, உடலை ஒட்டி உரசுவது என பல சங்கடங்கள் நான் சந்தித்தேன் என அமலா பால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நெட்டிசன்கள் பலரும் அமலா பாலை விமர்சித்து வருகின்றனர். காரணம் அவர் அந்த படத்தின் விழாக்கள் மற்றும் மீடியாவிடம் பேசும்போது சுசிகணேசனை பற்றி ஆஹா ஓஹோ என புகழ்ந்து பேசியுள்ளார்.

மேலும் வருடத்திற்கு ஒரு படமாவது உங்களுடன் சேரவேண்டும் என்று கூறி இருப்பது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமலா பால் மீ டூவை சுயநலத்திற்காக பயன்படுத்திகாரா என்ற நெட்டிசன்கள் திட்டி வருகிறார்கள்.