அஜித்துடன் மீண்டும் இணையாததற்க்கு காரணம் – முதன்முதலாக பதில் அளித்த முருகதாஸ்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தல அஜித் நடித்த “தீனா” அஜித்திற்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்திற்கு பிறகு தான் தல என்ற பட்டமும் கிடைத்தது.

மீண்டும் எப்போது இவர்கள் இணைவார்கள் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். தற்போது விஜய்யை வைத்து சர்கார் படத்தை இயக்கியுள்ள முருகதாஸ் இப்படத்தின் ப்ரமோஷன் வேளைகளில் இறங்கியுள்ளார்.

ஆனால் இப்பட கதை பற்றி பிரச்சனை எழும்ப முருகதாஸ் பேட்டிகள் கொடுத்திருந்தார். அதில் ஒரு பேட்டியில் அஜித் படம் குறித்து கேட்டபோது, என் நலம் விரும்பிகள் அனைவரும் அவருடன் படம் எப்போது என்ற கேட்கிறார்கள்.

எனக்கும் அவருக்கும் ஒரு பெரிய கேப் விழுந்துவிட்டது, அவர் பெரிய நபர் நமக்கு அடையாளம் எல்லாம் கொடுத்திருக்கிறார். எப்படியாவது ஒரு வாய்ப்பு யார் மூலமாவது இல்லை அவர் மூலமாக வரும் என நம்புகிறேன்.

அதுக்கு ஒரு நேரம், காலம் வரும்போது ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் படமாக இருக்கும் என்று பேசியுள்ளார்.