ரஜினியை இயக்கும் படத்தின் கதை களத்தை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ் – ரொம்பவும் வித்யாசம்!

சர்கார் படத்தை அடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் யாருடன் இணைந்து பணியாற்றப் போகிறார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அவர் ரஜினிகாந்தை சந்தித்து கதை சொல்லியதாகவும், விரைவில் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றுவார் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தனியார் இணையதள ஊடகத்துக்கு பேட்டியளித்திருக்கும் அவர் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார்.

ரஜினியின் படம் குறித்து பேசும்போது, ஒரு கதை கூறியுள்ளேன் அவர் பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார். ஒரு பேன்டஸியான கற்பனை கதை செய்யலாம் என்ற எண்ணம் இருக்கிறது அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தையில் தெரியும் என கூறியுள்ளார்.

இந்த பேட்டி சர்கார் பட ரிலீஸ் நேரத்தில் கொடுத்தது முருகதாஸ், இப்போது ரஜினியுடனான படம் உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.

Loading...