சர்கார் என்னுடையது தான் – முருகதாஸ் வீடியோ மூலம் விளக்கம்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “சர்கார்” படம் உலகம் முழுவதும் வரும் நவம்பர் 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகா காத்திருக்கிறது.

இந்நிலையில் முருகதாஸ் மீது வருண் ராஜேந்திரன் என்பவர் தனது “செங்கோல்” என்ற கதையை திருடி இவர் சர்கார் என்ற படத்தை இயக்கியுள்ளார் என்று புகார் கூறியிருந்தார்.

நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இன்று நீதிமன்றத்தில் இந்த பிரச்சனை வருணுக்கு சாதகமாக முடிவுக்கு வந்தது. வருணின் பெயர் சர்கார் டைட்டில் கார்டில் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முருகதாஸ், வருண் ராஜேந்திரன் கதை என ஒப்புக் கொண்டதாக செய்திகள் எல்லாம் வந்தது. டைட்டில் கார்ட்டில் அவருக்கு நன்றி தெரிவித்துப்பதாகவும், 30 லட்சம் அவருக்கு கொடுக்க சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டது.

ஆனால் அந்த செய்திகள் எல்லாம் தவறு என்பதை கூற முருகதாஸ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ஒருத்தனுடைய ஓட்டைக் கள்ள ஓட்டாகப் போட்டுள்ளனர் என்பது தான் படத்தின் கரு. இந்த கரு மட்டும் தான் ஒற்றுமை.

எனக்கு முன்பு வருண் இதை பதிவு செய்ததால் அவரை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் தான் பெயர் போடுபடுகிறது மற்றடி இதன் திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாம் நான் தான் என்று கூறியுள்ளார் .