கதை விவாதத்திற்கு மட்டும் அட்லீ எவ்வளவு செலவு செய்கிறார் தெரியுமா? ஷாக் ஆகிடுவீங்க!

சர்கார் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் கதை விவாதம் நடந்து வருகிறது.

கதை விவாதம் செய்ய அட்லீ மற்றும் தயாரிப்பாளர் குழு அமெரிக்கா சென்றுள்ளார்கள். அங்கே அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமுக தளங்களில் பகிர்ந்துள்ளார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர் ஒருவர் அட்லீ படத்தின் கதை விவாதம் ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

இதில் அவர் கூறுகையில் அட்லீ கதை விவாதத்திற்கு மட்டும் ரூ 1 கோடி வரை செலவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார், இதை கேட்ட பலருக்கும் ஷாக் தான்.

thalapathy 63

அட்லீ இயக்கிய மூன்று படங்களுமே வேறொரு படத்தின் காப்பி தான் என்ற சர்ச்சை பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இப்போது எடுக்கப்போகும் படமும் ஹிந்தி படத்தின் தழுவல் தான் என்று கூறப்படும் நிலையில் தெரிந்த கதையையே விவாதம் செய்வதாக கூற ஊரு சுற்றுகிறார் என்று கோலிவுட் வட்டாரம் புலம்பிவருகிறது.

Loading...

Leave a Reply

Your email address will not be published.