ஒரு வரி ஒற்றுமையெல்லாம் பெருசா? முருகதாஸ் பேச்சுக்கு பாக்யராஜ் சொன்ன அதிரடி கருத்து !

ஏ.ஆர்.முருகதாஸ் தனது உதவியாளரிடம் இருந்து கதையை திருடி “சர்கார்” படத்தை இயக்கியுள்ளதாக புகார் எழுந்தது. இதை எழுத்தாளர் சங்கம் தலைவர் கே.பாக்கியராஜ் பல விசாரணைக்கு பிறகு கதை திருடப்பட்டது உண்மைதான் என்று கூறியுள்ளார்.

இதை மறுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் இது பற்றி நான் கோர்ட்டில் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டார்.இதையடுத்து முருகதாஸும், பாக்யராஜும் பேட்டியளித்து வருகின்றனர்.

பாக்யராஜ் இதுபற்றி கூறுகையில், முருகதாஸ் தொடர்ந்து இதுபொதுவான விஷயம் யார் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்கிறார். ஓட்டு மிஸ் ஆனது கதையல்ல. அதை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்று தேர்தலை நிறுத்தி அவரே தேர்தலில் நின்றார் என்பது தான் கதை. இதுதான் இருகதையிலும் உள்ள ஒற்றுமை. இதற்குமுன்பு எங்கும் நடக்காதபோது எப்படி இதை கவனத்தில் எடுக்காமல் இருக்கமுடியும் என்றார்.

மேலும், இதேப்போலத்தான் இதற்கு முன்பு ஒரு கதையாசிரியர் ஒரு இயக்குனரிடம் கதை சொல்லி வந்த பிறகு அதை அவருக்கு தெரியாமல் படமாக எடுத்துவிட்டார்கள். இதை கேட்டபோது அவர் சொன்னது ஒரு காட்சிதானே இதற்கு போய் எப்படி உரிமை கேட்கிறார் என்று இயக்குனர் சொன்னார்.

இதற்கு அந்த கதையாசிரியர் ஒரு சொட்டு விந்துதான் ஆறடி மனிதன் உருவாகிறான் என்று சொன்னதை கேட்டதும் அவருடன் சமரசம் பேசினார்கள். யார் அவர் என்று சொல்லவிரும்பவில்லை என்று பாக்யராஜ் தெரிவித்தார்.

இப்போது இந்த உதவி இயக்குனர் பணம் கேட்கவில்லை. வெறும் இந்தகதையை யோசித்தவர் என்ற முருகதாஸ் பெயருடன் இணைத்து போட்டால் போதும் என்று தான் கேட்கிறார்.