வைரமுத்து மீதும் சின்மயி கொடுத்த பாலியல் புகார் பொய்யா? அவரது கணவர் விளக்கம்

பாடகி சின்மயி பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை கூறி சர்ச்சைகளில் சிக்க வைத்து வருகிறார். தன்னை 13 வருடங்களுக்கு முன்பு படுக்கைக்கு அழைத்ததாக கவிஞர் வைரமுத்து மீது இவர் தற்போது பகிரங்க புகார் கூறியுள்ளார்.

இது தமிழ் சினிமா துறையில் உள்ளவர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்ல மனிதர் என்ற பெயரை வாங்கிய வைரமுத்துவிற்க மீது இப்படி ஒரு புகாரா என்று பலர் திகைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு 100 சதவீதம் உண்மை என சின்மயின் கணவர் ராகுல் கூறியுள்ளார். “அவர் என்னிடம் இந்த விஷயத்தை சொல்லவே அதிகம் தயங்கினார்” என ராகுல் ரவீந்திரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்குமுன் ஒரு ஆணாக தன் செய்கையால் தெரிந்தோ தெரியாமலோ எந்த பெண்னாவது தவறாக எடுத்துக்கொண்டிருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என கூறியுள்ளார்.