வைரமுத்து குற்றச்சாட்டை மறுக்கவில்லை – இறங்கி அடிக்கும் சின்மயி!

வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்துள்ள சின்மயிக்கு ஆதரவு பெருகிவருகிறது. இவரை தொடர்ந்து சினிமா திரையில் இருக்கும் பல பெண்கள் தங்கள் பெயர்களை குறிப்பிடாமல் வைரமுத்து மீதும் புகார்களை அடுக்கி வருகிறார்கள்.

இதை தனது ட்விட்டர் பக்கத்தில் மீடூ என்ற ஹாஷ் டாக் மூலம் சர்ச்சையை ஏற்படுத்திய பாடகி சின்மயி விமான நிலையத்தில் மிகவும் தைரியமாக பேசியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சின்மயி, இந்த சமூகத்தில் “ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள், திருநங்கைகள், திருநம்பிகள், என பலரும் பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது தான் அது குறித்த உண்மைகள் வெளிவரத் தொடங்கி இருக்கின்றன. இதற்கு பல முன்னணி நடிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து பேசிய சின்மயி, நான் தெரிவித்த குற்றச்சாட்டை வைரமுத்து மறுக்கவில்லை.

‘சமீபகாலமாக என்னை அவமதிக்கும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் இதுவும் ஒன்று’ என்றுதான் கூறினார். என்னுடன் இருக்கும் பாடகிகளுக்கு குரல் இல்லை. கணவன், தாய் உள்ளிட்டோரை தாண்டி வரவேண்டும் என்ற பிரச்சனை உள்ளது. அவர்களுக்காக நான் குரல் கொடுக்கிறேன்.

இது என்னோட சக பாடகிகளுக்கு நடந்துள்ள விஷயம். எனக்கு மிரட்டல் எதுவும் வரவில்லை. தமிழ் மட்டுமல்ல 8 மொழிகளில் பாடியிருக்கிறேன். 96 படத்தில் அனைத்து பாடல்களையும் பாடியுள்ளேன். நான் நான்கு ஐந்து பாடல்கள், பாடி கொண்டிருக்கும் போது, இதே குற்றச்சாட்டை நான் முன்வைத்திருந்தால், பப்லிசிட்டிக்காக பேசி சொல்கிறேன் என சொல்லி இருப்பீர்கள். இப்போது கூட அப்படிதான் நடக்கிறது. என மிகவும் ஆதங்கத்தோடு சின்மயி பேசினார்.