ஐஸ்வர்யா ராய்க்கே இதான் நிலைமை- சின்மயியின் அடுத்த அதிரடி

தமிழ் சினிமாவையே அதிர வைத்துவருகிறார் பாடகி சின்மயி. இவர் #MeToo ஹேஷ்டேக்கில் வைரமுத்து தொடங்கி பலபேர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இவர் மீது பலரும் கூறும் குற்றச்சாட்டு ஏன் முன்பே சொல்லாமல் இத்தனை வருடம் கழித்து இதை வெளியில் சொல்கிறீர்கள் என்று தான்.

இதற்கு சின்மயி, நடிகை ஐஸ்வர்யாராயே 10 வருடத்திற்கு முன்பு தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டலை சொன்ன பின்னர் வாய்ப்பு இல்லாமல் முடங்கிவிட்டார்.

அப்படியிருக்கையில் சினிமாவில் சாதிக்க நினைக்கும் நாங்கள் எல்லாம் எப்படி அப்போதே கூறியிருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.