படுக்கைக்கு அழைத்த வைரமுத்துவின் காலில் விழுந்தது ஏன் – சின்மயி அதிரடி பதில்

பாடகி சின்மயி வைரமுத்து மெது அடுக்கடுக்காக பாலியல் புகார்களை கூறி வருகிறார். இவரின் இந்த அதிரடியான புகார் கோலிவுட் வட்டாரத்தை அதிர்வலையில் சிக்கவைத்துள்ளது.

வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும், இது நடந்து 13 வருடங்கள் இருக்கும் என்று சின்மயி கூறியது வைரமுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

ஆனால் சின்மயி திருமணத்தின் போது வைரமுத்துவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். தன்னை படுக்கைக்கு அழைத்தவரின் காலில் விழலாமா என்ற கேள்விகள் வந்தன.

அதற்கு பதில் அளித்துள்ள சின்மயி, “அப்போது என் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்த விஷயம் தெரியாது. வைரமுத்துவின் மகன்கள் இருவரும் எங்களுக்கு நெருக்கமானவர்கள். அவர்களை அழைக்கும்போது அவர்களின் அப்பா வைரமுத்துவை எப்படி அழைக்காமல் விட முடியும்” என கூறியுள்ளார்.