சர்கார் கதை திருட்டு நிரூபணமானதா? – விஸ்வரூபம் எடுத்த பிரச்சனை!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் உலகம் முழுவதும் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி செம வரவேற்பை பெற்றுவருகிறது.

இதற்கிடையே இப்படத்திற்கு புதிய ரூபத்தில் சிக்க வந்துள்ளது. முருகதாஸ் தன்னுடைய “செங்கோல்” என்ற கதையை திருடி “சர்கார்” படத்தை எடுத்துள்ளதாக வருண் ராஜேந்திரன் என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கூறியிருந்தார்.

கே.பாக்கியராஜ் தலைமையில் விசாரணை நடந்து முடிந்த நிலையில் அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் செங்கோல் கதையின் 95 சதவீதம் காட்சிகள் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ளது உறுதியாகியுள்ளதாம்.

இதனால் அந்த கதை அவருக்கு தான் உரிமையானது என எழுத்தாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ள ஏ.ஆர்.முருகதாஸ் மேல் முறையீட்டிற்கு கோர்ட்டிற்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.