ஆடுகளம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம் – மிஸ் பண்ணிட்டாரே!

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி என்றால் அந்த படத்திற்கு எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும். தரமான இயக்குனர் சிறந்த நடிகருடன் இணைந்தால் எப்படிப்பட்ட படம் கிடைக்கும் எனபது சொல்லி தெரியவேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு தரமான “வட சென்னை” படத்தை தான் இந்த கூட்டணி சமீபத்தில் கொடுத்துள்ளார்கள். கடந்த வாரம் வெளியான வட சென்னை படம் அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துளளது.

இப்படத்தில் நடித்த மற்ற நடிகர்களுக்கு பாராட்டுக்கள் அதிகம் குவிந்து வருகிறது.இதில் தம்பி கதாபாத்திரத்தில் நடித்த டேனியல் பாலாஜி ஒரு சுவாரசிய தகவலை கூறியுள்ளார்.

அதாவது ஆடுகளம் படத்தில் முதலில் பேட்டைக்காரன் கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜியை நடிக்க வைக்க வெற்றிமாறன் முயற்சி செய்தாராம்

ஆனால், டேனியல் பாலாஜியே ‘வெற்றி என்னை நீங்க வயதானவராக காட்டுவதற்கு, ஒரு வயதானவரே நடித்தால் நன்றாக இருக்கும்’ என்று சொல்ல பிறகு தான் மாற்றினார்களாம்.

அந்த கதாபாத்திரத்தில் பேட்டைக்காரனாக நடித்தவருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.