தரமான இயக்குனர் படத்தில் நடிக்கும் தனுஷ் – ரசிகர்கள் குஷி

டாப் நடிகர்கள் வரிசையில் இருக்கும் தனுஷ், தமிழ் படங்களை தாண்டி பாலிவுட்,ஹாலிவுட் வரை சென்றுவிட்டார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “வட சென்னை” படம் செம ஹிட் அடித்தது.

மெகா ஹிட் ஆனா இந்த “வட சென்னை” படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. ஆனால் அதற்கு முன்பு தனுஷ் ராட்சசன் இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளது.

தற்போது ஒரு சூப்பர் தகவலை அறிவித்துள்ளார் தனுஷ், பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்து நடிக்கவுள்ளாராம். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளாராம்.

அது குறித்த ட்விட்டை ஒன்றை தனுஷ் தற்சமயம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.தனுஷ் தொடர்ந்து தரமான இயக்குனர்களில் படங்களில் நடிப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

 

Loading...