மாரி 2 ரிலீஸ் தேதியை அறிவித்த தனுஷ் – நாளை ட்ரைலர் ரிலீஸ் !

2015-ஆம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான “மாரி” படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. மீண்டும் அதே கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தின் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

கிருஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ரிலிஸ் தேதியை தற்போது தனுஷ் அறிவித்துள்ளார். இப்படம் டிசம்பர் 21ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார், ட்ரைலர் நாளை வருவதாக கூறியுள்ளார்.

Loading...