தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் ஏற்காத கதாபாத்திரத்தில் தனுஷ்? – அடுத்த பட அப்டேட்!

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான “வட சென்னை” படம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இப்படம் வெற்றியை சந்தித்துள்ளது.

இப்படத்தை தொடர்ந்து தனுஷின் “என்னை நோக்கி பாயும் தோட்டா” படமும் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. ஆனால் இன்னும் சிக்கல் முடியாதததால் ரிலீஸ் தேதி அறிவிக்காமலே இருக்கிறார்கள்.

தனுஷ் மீண்டும் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிப்பார் என்ற தகவல்களும் வெளியானது. இந்நிலையில் அண்மையில் வெளியாகி ஹிட்டான ராட்சஸன் படத்தில் இயக்குனர் ராம்குமார் இயக்கவுள்ள ஃபேண்டஸி காமெடி படத்தில் நடிக்கவுள்ளாராம்.

இப்படத்தில் தனுஷ் இதுவரை நடிக்காத ஒரு ரோலில் நடிக்கவுள்ளாராம். நமக்கு கிடைத்த தகவல் தனுஷ் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

இது அவருக்கும் சரி தமிழ் சினிமாவிற்கு மிகவும் புதியது. இதனால் எந்த அளவிற்கு இது சத்தியம் என்று படம் உருவானால் தான் தெரியும்.

Loading...