பாக்ஸ்ஆபிஸில் நேரடியாக மோதும் தனுஷ்-சிவகார்த்திகேயன்?

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகமான புதிதில் அவருக்கு அதிகம் ஆதரவு கொடுத்தவர் நடிகர் தனுஷ். இவரை பல இயக்குனர்களுக்கு அறிமுகப்படுத்தி ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர்

அதை தொடர்ந்து சிவகார்திகேயன் தனியாக தனது வழியில் சென்றுவிட்டார். அவருக்கென்று தனி மார்க்கெட் உருவாகியுள்ளது

இந்நிலையில் தற்போது அவர்கள் இருவரும் பாக்ஸ்ஆபிஸில் நேரடியாக மோதவுள்ளதாக கூறப்படுகிறது. ‘மாரி 2’ திரைப்படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அப்போது சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா படத்தை வெளியிடவுள்ளார்களாம். இது பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிற்து.

இவர்களுடன் விஜய் சேதுபதியின் சீதக்காதி படமும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Loading...