தனுஷின் வட சென்னை படத்தின் இரண்டு நாள் மாஸ் வசூல் – விவரம் உள்ளே

வடசென்னை தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் நேற்று முன்தினம் வெளியானது. வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் உருவான இப்படம் எதிர்பார்த்த மாதிரியே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

விமர்சன ரீதியாகவும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. மூன்று பாகங்களாக உருவாகவுள்ள இப்படத்தின் அடுத்த பாகத்திற்கு வெயிட்டிங் என ரசிகர்கள் சமூக தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது வருகிறது. இப்படம் சென்னையின் மட்டும் இரண்டு நாட்கள் முடிவில் 1.35 கோடி வசூல் செய்துள்ளது.