வட சென்னையை தொடர்ந்து தனுஷ்-வெற்றிமாறன் இணையும் படம் இது தான் – சூப்பர் தகவல்!

தமிழ் சினிமாவில் வெற்றி படங்கள் கொடுத்த கூட்டணி என்று பார்த்தல் அதில் தனுஷ்-வெற்றிமாறன் முக்கிய இடத்தில் இருப்பார்கள். இவர்கள் கூட்டணியில் அடுத்த வரவிருக்கும் படம் தான் “வட சென்னை”

மூன்று பாகங்களாக உருவாகவுள்ள இப்படத்தின் முதல் பாகம் வரும் 17ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து இவர்கள் மீண்டும் 4வது முறையாக இணையவுள்ளார்களாம், இப்படம் வடசென்னை-2விற்கு முன்பே தொடங்கவுள்ளதாம்.

மேலும், சூதாடி என்ற ஒரு கதையை வெற்றிமாறன் தனுஷிடம் சொன்னதாக கூறப்பட்டது.

தற்போது அந்த படத்தை தான் மீண்டும் தொடங்கவுள்ளதாக தெரிகின்றது, மேலும், இப்படம் சூதாட்டத்தை மையமாக கொண்டு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.