நான்கு நாயகிகளுடன் துல்கர் சல்மான் நடிக்கும் தமிழ் படம்!

பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் தமிழில் வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி, சோலோ ஆகிய படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக இவர் நடிக்கும் “வான்” படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகவுள்ளது.

இப்போது தமிழில் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” என்ற படத்திலும் நடித்து வருகிறார் இவர் அதே சமயத்தில் கார்த்திக் இயக்கத்தில் வான் என்ற படத்திலும் நடிக்கவுள்ளார்.

ராஜா ராணி, கத்தி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். தீனதயாளன் இசையமைக்கிறார்.

தற்போது வெளியாகியுள்ள செய்தி என்னவென்றால் இப்படத்தில் துல்கருடன், நிவேதா பெத்துராஜ், கல்யாணி பிரியதர்ஷினி, க்ரிதி, மற்றும் சினேகா இணைந்து நடிக்கஉள்ளனர். இப்படமும் அவருக்கு தமிழில் நல்ல வரவேற்பை தரும் என்று எதிர்பார்க்கலாம்.

Loading...