என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை வாங்கிய பிரபல நிறுவனம் – ரிலீஸ் உறுதி

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் “என்னை நோக்கி பாயும் தோட்டா”. நீண்ட நாட்களாக கிடப்பில் கிடைக்கும் இப்படத்தை மீதும் தூசி தட்டி எடுக்கப்பட்டுளள்து.

பைனான்ஸ் பிரச்சனையால் படம் பாதியில் நீக்கப்பட்டது. அந்த பிறகு மீண்டும் படப்பிடிப்புகள் நடந்து தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது .

ஆனால் மீண்டும் அதே பைனாஸ் பிரச்சனை வர படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது என்ன தகவல் என்றால் இப்படத்தை லைகா நிறுவனம் வாங்கியதவாகவும் டிசம்பர் மாதம் இறுதியில் படம் சென்சார் சென்று ரிலீஸுக்கு தயாராகும் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் இயக்குநர் சசிகுமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தர்புகா சிவா இசையமைத்து வரும் இதற்கு மனோஜ் பரமஹம்சா – ஜோமன்.டி.ஜான் ஒளிப்பதிவு செய்கின்றனர்.

Loading...