பேட்ட பாடலை கலாய்த கங்கை அமரனை திட்டி தீர்க்கும் ரஜினி ரசிகர்கள்!

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் பேட்ட. இந்த படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா என பிரபலங்கள் ஏராளமானோர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் இப்படத்தின் “மரண மாஸ்” என்ற பாடல் சமீபத்தில் வெளியானது, நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினியின் இன்ட்ரோ பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார்.

ஆனால் அந்த பாடலில் அதிகம் அனிருத் பாடிய வரிகள் தான் இடம்பெற்றது, இதனால் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தார்கள்.

இதை விமர்சிக்கும் வகையில் கங்கை அமரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மீம் பகிர்ந்திருந்தார். இதை பல ரஜினி ரசிகர்கள் திட்ட ஆரம்பித்துள்ளார்கள்.

Loading...