எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகிய பாக்யராஜ் – சர்கார் பிரச்சனை தான் காரணமா?

விஜய் – முருகதாஸ் கூட்டணியில் உருவாகி இருக்கும் சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று வருண் என்பவர் கொடுத்த புகார் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தான் பதிவு செய்து வைத்திருந்த “செங்கோல்” கதையை திருடிய முருகதாஸ் “சர்கார்” என்ற படத்தை எடுத்துள்ளார் என்று அவர் புகார் கொடுத்திருந்தார்.

இதை விசாரித்த எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் இரண்டு கதையும் ஒன்று தான் என்று உறுதியாக கூறிவிட்டார்.அதற்கு பிறகு இந்த பிரச்சனை பூதாகாரமாகியது.

சன் பிக்சர்ஸ் என்ற பெரிய நிறுவனம் தயாரித்தும் விஜய் போன்ற முக்கிய புள்ளியின் படத்திற்கு எதிராக வருணுடன் நின்றவர் பாக்யராஜ். இந்த பிரச்சனை நீதிமன்றத்திற்கு சென்று பாக்யராஜ் சொன்னது போல வருண் இந்த போராட்டத்தில் வெற்றி பெற்றார்.

சர்கார் படத்தில் வருணின் பெயர் வரும் என்று சமரசமாக பேசி முடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.

திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து கே.பாக்யராஜ் விலகியுள்ளார். சர்கார் பட கதை விவகாரத்தில் நடுநிலையுடன் செயல்பட்ட இவர் உடனே விலகி இருப்பது கேள்விக் குறியாகியுள்ளது

பதவியேற்ற 6 மாதத்திலேயே பதவி விலகியுள்ளார் கே.பாக்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.