விஜய்-முருகதாஸ் பார்த்த வேலையா இதெல்லாம்? – கடுப்பான கலாநிதிமாறன்

தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள படம் “சர்கார்” வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தின் டீசர் வரும் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடந்து. இதில் பேசிய விஜய் “நான் முதல்வரானால் நடிக்க மாட்டேன்” என்றும் நான் முதல்வரானால் ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிப்பேன் என்று கூறினார்.

இவரது பேச்சு மிகவும் வரவேற்கப்பட்டது. ஆனால், இந்த உரையாடல் முன்பே பேசி வைக்கப்பட்டது தான். இதெல்லாம் விஜய், முருகதாஸ் ப்ளான் தான், கலாநிதிமாறனுக்கே இது தெரியாது என ஒரு பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

மேலும், இதனால், கலாநிதிமாறன் கடும் அப்செட்டில் இருப்பதாகவும், பேட்ட இசை வெளியீட்டு விழா எல்லாம் என்னை கேட்காமல் எதுவும் நடக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளாராம்