விஜய்யின் சர்க்காருக்கு ஆதரவு – அரசியல்வாதிகளை சரமாரியாக தாக்கிய கமல் ஹாசன்!

சர்கார் படத்தின் ஆளும் கட்சிக்கு எதிராக இடம் பெரும் பல காட்சிகளை நீக்கக்கூறி அதிமுகவினர் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.சர்கார் திரையிடும் தியேட்டர்களில் இவர்கள் கொடுக்கும் பிரச்சையால் நேற்று சில இடங்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் மேலும் அரசியல் பிரமுகர்கள் பலரும் போராட்டங்களில் இறங்கியுள்ள நிலையில் இன்றும் சில தியேட்டர்களில் படம் ஓடாமல் செய்து பிரச்சனை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கமல்ஹாசன் விஜய்க்கு ஆதரவாக பேசியதோடு பிரச்சனை செய்யும் அரசியல் வாதிகளுக்கும் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

ட்விட்டரில் இவர் “முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும்.நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்.” என்று கூறியுள்ளார்.

Loading...

Related posts