பேட்ட லீக் – பிரபல தொலைக்காட்சிக்கு பகிரங்கமாக திட்டிய கார்த்திக் சுப்பாராஜ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படம் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க கார்த்திக் சுப்பாராஜ் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ரஜினி கொஞ்சம் யங் லுக்கில் இருக்கிறார்.

சமீபத்தில் இந்த லுக்கில் இருக்கும் ரஜினிகாந்தின் புகைப்படங்கள் லீக் ஆகி இணையத்தில் வேகமாக வைரல் ஆகி வந்தது.

ஆனால், இதை ரசிகர்கள் ஆர்வமிகுதியில் ஷேர் செய்தாலும் பரவாயில்லை, தந்தி டிவி இதை ஷேர் செய்து நியூஸாக போட கார்த்திக் சுப்புராஜிற்கு இது கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும், இதை உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கவில்லை, ஒரு தொலைக்காட்சிக்கு என்று சில கட்டுப்பாடுகள் வேண்டும் என கூறியுள்ளார்.