மீண்டும் வந்த நாட்டி டான் – மாஸான “மாரி 2” ஃபஸ்ட் இதோ!

தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ ஷங்கர் நடித்த மாரி படம் 2015 ஆண்டு வெளியானது. பாலாஜி மோகன் இயக்கிய இப்படம் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த காரணத்திற்காக இப்படத்தில் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. “மாரி 2” என்ற பெயரில் உருவாகும் இப்படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் சாய் பல்லவி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் வரலட்சுமி நடிக்கிறார்.

இன்று இப்படத்தில் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதே கெட் அப்பில் மாஸாக தோன்றியுள்ள குறும்பு டான் இணையதளத்தில் வைரலாக பரவிவருகிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் டிசம்பர் வெளியாகவுள்ளது.