விஜய்க்கு பிறகு தனுஷ் மட்டுமே செய்த பிரம்மனாட சாதனை – கலக்கல் மாரி 2 !

தனுஷ் நடிப்பில் 2005 வெளியான மாரி படம் இவரை மாஸ் ஹீரோவாக காட்டியது. அதன் இரண்டாம் பாகமாக “மாரி 2” தற்போது உருவாகி வரும் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் நேற்று முந்தினம் வெளியாகி செம வரவேற்பை பெற்றது. மாஸான பஞ்ச் வசனங்கள், ஆக்க்ஷன் காட்சிகள் அடங்கிய இந்த ட்ரைலர் அவரது ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ட்ரைலர் வந்த 1 நாளிலேயே அது 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. மேலும் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.

விஜய்யின் சர்கார், மெர்சல் படங்களுக்கு பிறகு இப்படியான ஒரு சாதனையை தனுஷ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 24 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ட்ரைலர் வரிசையில் மூன்றாவது இடத்தில மாரி 2 உள்ளது.

மெர்சல் ட்ரைலர் 24 மணி நேரத்தில் 11.2 மில்லியன் பார்வையாளர்கள் கடந்து இரண்டாவது இடத்திலும், சர்கார் ட்ரைலர் 24 மில்லியன் பார்வையாளர்கள் கடந்து முதலிடத்திலும் உள்ளது .

Loading...