அஜித் போன் கால் போதும் – முருகதாஸ் வெளியிட்ட மாஸ் தகவல்!

விஜய்யை வைத்து கத்தி, துப்பாக்கி, சர்கார் படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக ரஜினிகாந்த் படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இதை தொடர்ந்து முருகதாஸ் நீண்ட வருடங்களாக அஜித்திற்காக ஒரு கதை ரெடி செய்துவிட்டு காத்திருக்கின்றார்.

தற்போது ஒரு பேட்டியில் கூட ‘என்னிடம் செம்ம மாஸ் கதை ரெடியாகவுள்ளது, அப்படியிருக்க அவரிடம் இருந்து ஒரு போன் கால் வந்தால் போதும்.

ஏனெனில் ரசிகர்களே பல முறை என்னிடம் கேட்டுள்ளனர், அவர்களின் அன்பிற்காக நாங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

அடுத்தாக அஜித் தீரன் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...