விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மனைவி ஷாலினி? – சுவாரசிய தகவல்!

தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தை முடித்துவிட்டு சுற்றுலா சென்றுள்ளார். அடுத்ததாக வினோத் இயக்கத்தில் பிங்க் ரீமேக்கில் அஜித் நடிக்கும் படம் டிசம்பர் இரண்டாவது வாரம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இயக்குனர் சிவா நயன்தாராவிட கதையை கூறியபோது என்ன நடந்தது என்ற சுவாரசிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால் முழுக்கதையையும் பொறுமையாக கேட்ட நயன்தாரா, கதை சொல்லி முடிந்ததும், உடனே அஜித்திற்கு போன் செய்து, சார் அப்படியே இந்த கதையில் வரும் கணவன், மனைவி உறவு நீங்களும் ஷாலினி மேடமும் இருப்பது போல் உள்ளது என்றாராம்.

அதாவது நயன்தாரா கதாபாத்திரம் ஷாலினியை மனதில் வைத்து தான் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த தகவலை ஒரு முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Loading...