பேட்ட படத்தின் கதை இப்படி தான் இருக்குமாம் – கசிந்த தகவல்!

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் மிக பெரிய நடிகர்கள் பட்டாளத்துடன் உருவாகிவரும் படம் “பேட்ட”. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வாரணாசியில் நடந்துவருகிறது.

இப்படத்தில் வட இந்தியாவில் இருக்கும் ஒரு கல்லூரியில் ஹாஸ்டல் வார்டனாக நடித்துள்ளாராம் ரஜினிகாந்த். பாட்ஷா படம் போல ஒரு கட்டத்தில் பிளாஷ் பேக் காட்சிகள் வர அதில் மதுரையில் ரவுடியாக இருப்பது போல கதையாம்.

பிளாஷ் பேக்கில் வெள்ளை வேட்டி சட்டையுடன் மதுரையில் மிகப்பெரிய ரவுடியாக இருப்பாராம். அப்படி இருக்கும் ரஜினி வட மாநிலக் கல்லூரியின் ஹாஸ்டலில் வார்டனாக பணியாற்றுகிறார். அசத்தலான ரவுடியாக இருந்த ரஜினி ஏன் வட இந்தியாவில் உள்ள ஒரு கல்லூரி ஹாஸ்டலில் வார்டனாக பணியாற்ற வேண்டும்? என்ற கேள்வியுடன் கதை பயணிக்கும் என சொல்லப்படுகிறது.

ரஜினியை ரவுடியாக நாம் பார்ப்பது புதிதல்ல.. ஆனால் கார்த்திக் எப்படி காட்ட போகிறார் என்பதில் தான் இருக்கிறது இந்த பேட்ட