பேட்ட படத்தில் ட்ரைலர்,ஆடியோ வெளியீடு தேதி இதோ – என்ன ரெடியா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2.0 படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதை தொடர்ந்து இவரின் “பேட்ட” படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் ஒரு நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளது.சமீபத்தில் இடத்தின் மரண மாஸ் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பொங்கலுக்கு இப்பட ரிலீஸ் என்பதால் புரொமோஷன் வேலைகள் நடந்து வருகிறது. தயாரிப்பு குழு தினமும் படத்தில் நடிப்பவர்களின் லுக்கை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அதோடு படத்தின் பாடல் வெளியீடு வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் என அறிவித்துள்ளனர்.

பாடல்கள் வெளியீட்டை தொடர்ந்து ரசிகர்கள் டிரைலர் எப்போது என கேட்க ஆரம்பித்துவிட்டனர். நமக்கு கிடைத்த தகவலின்படி படத்தின் டிரைலர் வரும் டிசம்பர் 12 ரஜினி அவர்களின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என கூறப்படுகிறது.

Loading...