அஜித்தால் தேவை இல்லாத தலைவலிக்கு ஆளாகும் ரஜினிகாந்த்?

தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது . இன்னும் சில தினங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும்.

அதை தொடர்ந்து பொங்கலுக்கு படத்தை வெளியிடுவதாக முன்பே படக்குழு அறிவித்துவிட்டது, அதே வாரத்தில் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தையும் ரிலிஸ் செய்ய சன் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளதாம்.

இந்த செய்தி உண்மைதான் என்கிறார்கள் நம்பத்தகுது வட்டாரங்கள். இதனால் அஜித், ரஜினியின் மோதல் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டு பெரிய நடிகர்களின் படம் ரிலீஸ் ஆகவுள்ளதால் கடும் போட்டி நிலவும் என தெரிகிறது. இப்போதெல்லாம் பாஸ் ஆபீஸ் நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வரும் ரசிகர்கள்,அதை வைத்து யார் கோலிவுட் கிங் என்று சண்டை போட்டு வருகிறார்.

ரஜினி தனது ரசிகர்கள் பலத்தை வைத்து அரசியலுக்கு வரும் இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு மோதல் இவருக்கு நல்லது இல்லை தேவை இல்லாத தலைவலி அல்ல என்று பேசிக்கொள்கிறார்கள்.

One thought on “அஜித்தால் தேவை இல்லாத தலைவலிக்கு ஆளாகும் ரஜினிகாந்த்?”

Leave a Reply

Your email address will not be published.