ரஜினி, கமல் பட இயக்குனர் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” வெப் சீரிஸ்!

சோழ அரச பரம்பரையின் ஆட்சிக்காலத்தைப் பற்றிய விறுவிறுப்பும், வீரமும், தொன்மையும், காதல் மற்றும் நகைச்சுவை கலந்த காவியம் “பொன்னியின் செல்வன்”

கல்கி எழுதிய இந்த நாவல் உலக அளவில் பிரபலம். இந்த சரித்திர நாவலை படமாக எடுக்க எம்.ஜி.ஆர், கமல் ஹாசன், பாரதிராஜா, மணி ரத்னம் போன்ற ஜாம்பவான்கள் முயற்சி செய்த்தனர்.

தற்போது இந்த நாவலை தழுவி “பொன்னியின் செல்வன்” என்ற பெயரில் வெப் சீரிஸ் உருவாகவுள்ளது. இதை எம்.எக்ஸ். பிளேயர் நிறுவனம் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்தின் மே 6 எண்டர்டெயின்மென்ட் இணைந்து வெப் சீரிஸாக உருவாக்க உள்ளது.

இது “கோச்சடையான்” படம் போல அனிமேஷனில் உருவாகவுள்ளது. இதற்கான முறைப்படி அறிவுப்பு நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது

தற்போது மேலும் ஒரு வெப் சீரிஸ் “பொன்னியின் செல்வன்” நாவலை தழுவு உருவாகவுள்ளது. இதை பாட்ஷா, ஆளவந்தான் போன்ற படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ளார். இதற்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறதாம்.

விரைவில் இதன் நடிகர், நடிகைகள் மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

Please follow and like us:
Loading...

Related posts

Leave a Comment