பேட்ட படத்தில் நடிக்க மறுத்த முன்னணி நடிகர் – காரணம் இதுதான்!

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் “பேட்ட”. மிக பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வாரணாசி பகுதியில் நடந்து வருகிறது.

பேட்ட படத்தின் இரண்டாவது போஸ்டர் தீடிரென்று ரிலீஸ் ஆகி செம வரவேற்பை பெற்றது. ரஜினி முறுக்கு மீசையுடன் வெள்ளை வேஷ்டி சட்டையில் கெத்தாக அமர்ந்திருக்கும் அந்த போஸ்டர் வைரலாகியது.

இப்போது படம் குறித்து ஒரு குட்டி தகவல், அதாவது படத்தில் முக்கிய வேடத்தில் மலையாள சினிமா நடிகரும், நஸ்ரியாவின் கணவருமான பகத் பாசிலை நடிக்க வைக்க படக்குழு அணுகியுள்ளனர்.

ஆனால் அந்த நேரத்தில் அவர் வரதன் என்ற மலையாள படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதால் இப்படத்தில் நடிக்க மறுத்துள்ளார்.

இவர் ஏற்கெனவே சில காரணங்களால் மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.