96 கதை யாருடையது – இயக்குனர் பிரேம் குமார் அதிரடி விளக்கம்!

விஜய் சேதுபதி,த்ரிஷா நடித்து பிரேம் குமார் இயக்கிய படம் “96” படம் அணைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது. காதல் மட்டுமே கொண்ட இந்த படம் இளைஞர்கள் மத்தியில் வைரலாக பரவியது.

இந்நிலையில் இந்த படத்தின் கதை என்னுடையது என்று இயக்குனர் பாரதிராஜாவின் உதவி இயக்குனர் ஒருவர் புகார் கூறியிருந்தார். இதற்கு பாரதிராஜாவும் ஆதரவு தந்தார்.

இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு 96 இயக்குனர் பிரேம்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்தக் கதை என்னுடையது தான். இதை நான் 2016 ஏப்ரலில்‘96’என்ற பெயரில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன். இந்த கதையை முழுமையாக எழுதி முடித்த பின்னர் முதலில் இயக்குநர் பாலாஜி தரணீதரனிடமும், நடிகர் விஜய் சேதுபதியிடமும் தான் சொன்னேன்.”

படத்தின் ரிலீஸ் முன்பு விளம்பரப்படுத்தப்பட்ட போது வராத பிரச்சனை இப்போது ஏன் என அவர் கேட்டுள்ளார்.முழு வீடியோ கீழே ..