வன்மையாக கண்டிக்கிறேர்ன் – விஜய்க்காக களமிறங்கிய ரஜினிகாந்த் !

சர்கார் படத்தின் சில காட்சிகளை நீக்க கூறி அதிமுகவினர் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள். குறிப்பாக இலவசத்தை எதிர்க்கும் காட்சியை கண்டு அதிமுக தொண்டர்கள் கொந்தளித்துள்ளார்கள்.

சர்கார் திரையிடும் தியேட்டர்களில் அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் இறங்கியதோடு அங்கு இருந்த பேனர்களை கிழித்து அட்டூழியம் செய்தனர். இதனால் சில காட்சிகள் செய்யப்பட்டது.

இதனை எதிர்க்கு விஜய்க்கு ஆதரவாக படம் பிரபலங்கள் குரல் கொடுத்து வருகிறாரகள். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசனும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இவரை தொடர்ந்து ரஜினிகாந்தும் ஆளும்கட்சியை வன்மையாக கண்டித்துள்ளார்.

தனது ட்விட்டர் பதிவில் ரஜினிகாந்த் ‘தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.’ என்று கூறியுள்ளார்.