விஜய் சேதுபதி பற்றி அவதூறு பரப்ப விஷமிகள் செய்த வேலை – அதிர்ச்சியில் நடிகர் வெளியிட்ட தகவல் !

சினிமாவை தான் நடிகர் விஜய் சேதுபதி சமூகம் சார்ந்த விஷயங்களை பேசுவார். சமீபத்தில் சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் தனது கருத்தை துணிச்சலாக கூற அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது.

சமீபத்தில் விஜய் சேதுபதி பிரபல நியூஸ் சேனலுக்கு பகவத் கீதையை பற்றி அவதூறு கூறி கருத்து தெரிவித்தது போல ஒரு புகைப்படம் சமூக தளங்களில் பரவியது.

இதை பார்த்து அதிர்ச்சியாக அவர் உடனே ட்விட்டர் பக்கத்தில் இது நான் சொல்லிய கருத்து கிடையாது போலியான புகைப்படம் என்று தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘என் அன்பிற்குரிய மக்களுக்கு பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலைப் பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாகப் பேசியதும் இல்லை. பேசவும் மாட்டேன். சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது.

எந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையையும், ஒற்றுமையையும் குலைக்குமாறு நான் நடந்துகொள்ளவே மாட்டேன்.” எனப் பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவுடன் தான் பேசிய வீடியோ இணைப்பையும் வெளியிட்டுள்ளார். இதேபோல் அந்த டிவி சேனலும் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் வந்த செய்திகளே உண்மையானது என்று விஜய் சேதுபதியின் கருத்து அடங்கிய படத்தை ட்வீட் செய்துள்ளது.

Please follow and like us:
Loading...

Related posts

Leave a Comment