சண்டக்கோழி 2 படத்தை ரிலீஸ் செய்யமாட்டோம் என அறிவிப்பு – விஷாலுக்கு வந்த சிக்கல்!

பல வருடங்களுக்கு பிறகு லிங்குசாமி எடுத்துள்ள படம் “சண்டக்கோழி 2”. விஷாலை வைத்து வர இயக்கிய சண்டக்கோழி படத்திற்கு கிடைத்த வெற்றியை வைத்து மீண்டும் இவர்கள் இணைத்து இதன் இரண்டாம் பாகத்தை கொடுத்திருக்கிறார்கள்.

இன்று வட சென்னை படம் ரிலீஸ் ஆனா நிலையில் நாளை சண்டக்கோழி 2 ரிலீஸ் ஆகா தயாராக இருக்கிறது. வெற்றி படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் “சண்டக்கோழி 2” படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருட்டு விசிடி ஒழிக்கும் முயற்சியில் விஷால் 10 திரையரங்குகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளார். இதனை கண்டித்து சண்டக்கோழி-2 படத்தை வெளியிட மாட்டோம் என அனைத்து மாவட்ட திரையரங்க உரிமையாளர்களும் கூறியுள்ளனர்.

இந்த பிரச்சனை பெரிதாவதால் குறிப்பாக திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் சண்டக்கோழி 2 படம் வெளியாவது சந்தேகம் தான் என்கிறார்கள்.

Loading...