சர்கார் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு – அடேங்கப்பா இத்தனை கோடியா?

“சர்கார்” படம் உலகம் முழுவதும் சுமார் 3000க்கும் அதிகமான தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட உள்ளது. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு ரிலீஸ் இதற்கு முன்பு நடந்தது இல்லை என்று ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருக்கிறது தமிழ் திரையுலகம்.

தமிழ்நாடு, கேரளா, இலங்கை, அமெரிக்கா என பல இடங்களில் அதிகமான காட்சிகளைத் திரையிட முடிவு செய்துள்ளார்களாம்.தீபாவளி அன்று போட்டிக்கு வேறு எந்த படங்களும் இல்லாததால் பல தியேட்டர்காரர்களும் “சர்கார்” படம் மட்டும் தன திரையிடப்படவுள்ளது.

பாரிசின் புகழ் பெற்ற லீ கிரான்ட் ரெக்ஸ் தியேட்டரில் நவம்பர் 6ம் தேதி முதல் 13ம் தேதி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு “சர்கார்” படம் திரையிடப்பட உள்ளது. அதற்கான முன்பதிவையும் இப்போதே ஆரம்பித்துவிட்டார்கள்.

தீபாவளிக்கு இன்னும் 4 நாட்கள் இருப்பதால் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. “சர்கார்” படத்தின் முதல் நாள் வசூல் 50 கோடியைத் தொட்டாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.