வசூலில் சரிவை நோக்கி செல்லும் சர்கார்? இன்றைய ரிப்போர்ட் !

விஜய்யின் சர்கார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்தது வருகிறது. ரிலீஸ் ஆனா இரண்டு நாட்களிலே 100 கோடி வசூலை எட்டியதாக தகவல்கள் வந்துள்ளது.

தீபாவளி விடுமுறை நாட்களில் சர்கார் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் வசூல் குவிந்தது. இரண்டு நாட்களில் ரூ 4.69 கோடி வரை சென்னையில் சர்கார் வசூல் செய்தது.

ஆனால், நேற்று சென்னையில் ரூ 1.2 கோடி தான் வசூல் வந்துள்ளது,இந்நிலையில் இந்த வாரத்தில் வசூல் குறையும் என்றும் மீண்டும் விடுமுறை தினத்தில் வந்தால் தான் வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.