கட்டுப்பட்ட விஜய்யின் “சர்கார்” – இன்று முதல் காட்சிகள் நீக்கம் !

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளி அன்று வெளியான “சர்கார்” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் புதிய சாதனைகள் படைத்தது வருகிறது.

ஆனால் இப்படத்தில் இடம்பெறும் சில காட்சிகளால் அதிமுக கட்சியினர் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சர்கார் படத்தில் வில்லியாக நடித்திருந்த வரலட்சுமிக்கு ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி என்ற பெயரை வைத்தது கட்சியினர் இடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இலவச பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் மூலம் என எங்களுக்கு எதிராக விஜய் செயல்படுகிறார் என்று அமைச்சர்கள் பேசிவருகிறார்கள்.

சர்கார் திரையிடும் திரையரங்குகளில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு சம்மந்தப்பட்ட காட்சிகளை நீக்க கூறி வலியுறுத்தி வருகிறார்கள்.இதில் சில இடங்களில் பேனர்களை கிழித்து எதிர்பார்க்காட்டி வருகிறார்.

இந்த பிரச்னையை முடிக்க சர்கார் படக்குழு அதிரடி முடிவை எடுத்துள்ளது. இன்று சர்கார் திரைப்படம் மறுதணிக்கைக்கு சென்று 2 காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது.

மேலும் கோமளவல்லி எனும் பெயர் இடங்களிலெல்லாம் ஒலி வராமல், ம்யூட் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.மறுதணிக்கை முடிந்து சான்றிதழ் வழங்கும்பணிகளுக்குப் பிறகு,இன்று மதியத்தில் இருந்து திரையிடப்படும் என்று தெரிகிறது