சர்கார் பட காட்சிகளை ரத்து செய்த நீதிமன்றம் – அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

ஒரு வழியாக சர்கார் கதை பிரச்சனை முடிந்து படம் தீபாவளி அன்று திரைக்கு வரவிருகிறது.உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் சர்கார் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

இதற்கிடையே தீபாவளி உள்ளிட்ட விடுமுறை நாட்களில் படங்களை கூடுதல் காட்சிகள் திரையிட்டாலோ, அதிக விலைக்கு டிக்கெட் விற்றாலோ வழக்கு தொடர்வேன் என்று சமூக ஆர்வலர் தேவராஜ் என்பவர் தெரிவித்து இருந்தார்.

இதை வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூடுதல் காட்சிகள் திரையிட தடைவிதித்து உத்தரவிட்டது.

இதனால் சர்கார் படத்திற்கு அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.